புதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்

21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறு சீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம் இந்நிலையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதன் மூலம்,  சமநிலையிலான, துடிப்பு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கான லட்சியப்பாதையை இது வகுக்கிறது.

கல்வி அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் , கொள்கையை உருவாக்க பாடுபட்ட டாக்டர் கஸ்தூரிரங்கன் மற்றும் அவருடைய குழுவினருக்கும்  பாராட்டுகள். 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 12,500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 675 மாவட்டங்களில் விரிவான  ஆலோசனைகள் நடத்தி, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு இந்தக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.. அதனால் கள அளவிலான புரிதலை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது .

உயர் கல்வி நிலையங்களை ஊக்குவித்த , இந்தியாவை உலக அளவில் அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாடாக உருவாக்குவதில் இந்தக் கல்வி நிலையங்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. இந்தக் கல்வி நிலையங்கள்  உருவாக்கும் தரநிலை மதிப்பீடுகளை மற்ற கல்வி நிலையங்களும் பின்பற்றும் . தர்க்கரீதியிலான முடிவெடுத்தல் மற்றும் புதுமை சிந்தனை செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கு ஆக்க சிந்தனை மற்றும் கூர்ந்து சிந்தித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விஷயங்கள் இந்தக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகளில் இடம் பெற்றுள்ளன.

ஆசிரியர் மற்றும் மாணவருக்கு இடையில் தாராளமான தகவல் தொடர்பு மற்றும் கலந்துரையாடல் அம்சங்களை வலியுறுத்தும் வகையில் பகவத் கீதை மற்றும் கிருஷ்ணர்-அர்ஜுனர் கலந்துரையாடல்களை கூறலாம் . ஆழ்ந்து சிந்தித்தல் மற்றும் விசாரித்து தெரிந்து கொள்ளும் உத்வேகத்திற்கு ஊக்கம் அளிப்பதாக தேசிய கல்விக் கொள்கை உள்ளது . இந்தக் கொள்கையை சிறப்பாக அமல் செய்யும்போது, தட்சஷீலா மற்றும் நாளந்தா காலத்தில், கல்வியில் இந்தியா பெற்றிருந்த பெருமைகள் மீண்டும் கிடைக்கும்.

கல்வி மதிப்பு புள்ளிகள் வங்கி திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் பெற்ற கிரெடிட் புள்ளிகள் இதில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும். மாணவர்கள் ஈட்டியிருக்கும் புள்ளிகளின் அடிப்படையில் அவர்களுக்கு பட்டம்வழங்கப்படும். இதனால் மாணவர்கள் தங்களுடைய தொழில் திறன் பயிற்சிக் கல்வி,  தொழிற்கல்வியை தேர்வுசெய்ய முடியும். மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது மற்றும் விலகுவதற்கான சுதந்திரமும் இதன் மூலம் கிடைக்கும். பி.எட்., தொழிற் பயிற்சி மற்றும் தொலைதூரக் கல்வி திட்டங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் வகையிலும் இந்தக் கொள்கை அமைந்துள்ளது.

உயர் கல்விக்குப் பதிவு செய்வோர் அளவை 2035க்குள் 50 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படுள்ளது.  இந்த இலக்கை எட்டுவதற்கு ஆன்லைன் கல்வித் திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் , கல்வி நிலையங்களுக்கு நேரில் செல்ல முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி அளிக்கவும் இதை பயன்படுத்தலாம் .

சர்வதேச மாணவர்களும் இந்த நடைமுறையில் பயன்பெறலாம் . 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி குறித்த அனைந்திந்திய கணக்கெடுப்பின்படி, உயர்கல்விக்குச் செல்லும் பெண்களின் விகிதம், ஆண்களைவிட சற்று அதிகமாகஇருக்கிறது. இருந்தாலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாக உள்ளது, குறிப்பாக தொழில்நுட்பக் கல்வியில் இந்த நிலை உள்ளது  சமத்துவம் மற்றும் பங்கேற்பில் கவனம் செலுத்துவதாக இந்தக் கொள்கை உள்ளது என்ற நிலையில், உயர் கல்வியில் பாலின பாகுபாடு சரி செய்யப்பட வேண்டும் . மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி நிலையங்களின் தலைமைகள் தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே, இந்த கொள்கையை அமல் படுத்துவதில் அமைப்புகளின் தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் .

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் . `உயர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துதல்’ என்ற தலைப்பில் இன்று நடந்த பார்வயாளர்கள் மாநாட்டின் தொடக்க உரையில் பேசியது .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...