மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவித்து உள்ளனர்.
கடந்த 2020ல், மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. மத்திய அரசின், ‘சமக்ர சிக்ஷா அபியான்’ எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்தக்கு தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கவில்லை. ‘மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க முடியும்’ என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால், அது தேசிய கல்வி கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும். அதில் இணைவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வரும் சூழலில், நம் கோவை மக்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டோம்.
புதிய கல்வி கொள்கை என்பது, கல்வியை வியாபாரமாக்கும் முயற்சி. இதன் வழியாக ஹிந்தியை மத்திய அரசு தமிழகத்துக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. கல்வியில் வளர்ச்சி அடைந்த தமிழகத்துக்கு, மும்மொழி தேவையில்லை.
ஹிந்தி வேண்டாம் என்பது எல்லாம் பழைய கதை. அதெல்லாம் இனி தமிழ கத்தில் எடுபடாது. மும்மொழி கல்வி திட்டத்தில், பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதை அவசியம் குழந்தைகள் படிக்க வேண்டும்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கை, தமிழகத்துக்கு மிகவும் அவசியம். தமிழ், ஆங்கிலம் அவசியம். அதே நேரத்தில் இன்னொரு மொழியை, குழந்தைகள் கற்றுக்கொள்வது அவசியம்.
தமிழ் மட்டும் தெரிந்தவர்கள், ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்படுகின்ற னர். அதனால் நம் குழந்தைகள் கண்டிப்பாக மூன்று மொழிகள் கற்றுக்கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வரவேற்க வேண்டும்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |