புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழகம் மறுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். ‘கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்’ என முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வியில் அரசியலைப் புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்.
புதிய கல்வி கொள்கையை குறுகிய மனப்பான்மையுடன் பார்ப்பது பொறுத்தமற்றது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் உயர வேண்டும். புதிய கல்வி கொள்கையின்படி எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது. புதிய கல்வி கொள்கை நமது மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை பாதுகாக்க கொண்டு வரப்பட்டுள்ளது.
பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களும் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. அரசியல் காரணங்களுக்காக, புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் மொழியை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்.
எந்தவொரு மாநிலத்திலும், எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. 3வது மொழி விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்து கொள்ளலாம்.
சமூக மற்றும் சமூக முன்னேற்றத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்கள் அவர்கள் விரும்பும் மொழியில் கல்வி கற்பதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது. அரசியல் காரணங்களுக்காக புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்வதில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |