மருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

மருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டம் தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். – பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டமசோதாவை தமிழக சட்டசபையில் குரல் ஓட்டெடுப்பு வழியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த உள் ஒதுக்கீடுசட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்தமசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மீது கவர்னர் இன்றுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 45 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்று இம்மசோதா தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புதியசட்டத்தின் வழியாக ஒருஆண்டுக்கு அரசு பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள் வரை மருத்துவ இடங்களில் கூடுதலாக சேரமுடியும். இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்குவரும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக. தலைவர் ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் எழுதியகடிதத்தில் சட்டம்குறித்து முடிவு எடுக்க 3 முதல் 4 வாரகால அவகாசம் தேவை எனவும், இதனை அமைச்சர்கள் குழுவிடம் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சட்டத்திற்கு வழிவகை ஏற்படுத்த அரசாணை வெளியிடபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்டமசோதா கவர்னரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும், மருத்துவ கலந்தாய்வு துவங்கியதால் அவசரஅரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இவ்வாறு அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் கவர்னர் முடிவை அறிவிக்ககோரி உள் ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய அரசு முடிவு

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...