டில்லியில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 4 நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ளார். அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது தனிப்பட்ட பயணம் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இன்று (டிச.,24) டில்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியை, கவர்னர் ரவி சந்தித்து பேசி உள்ளார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து, பிரதமர் மோடியுடன் கவர்னர் ரவி ஆலோசனை நடத்தியதாக, டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஜனவரி 6ம் தேதி, கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளதால் அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |