சந்தைகளில் வெங்காயவிலை உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்ததை தொடர்ந்து, அதிகரித்துவரும் விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளைத்தளர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
2021 ஜனவரி 31 வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு, இரசாயனப் புகை கொண்டு தூய்மையாக்குதல் மற்றும் தாவர நலச்சான்றிதழ் ஆகிய விதிகளில் இருந்து விலக்களிக்க வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை முடிவெடுத்துள்ளது.
மேற்கண்ட தளர்வுகள் சிலநிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப் படுகின்றன. இரசாயனப் புகைகொண்டு தூய்மையாக்க படாமல் இந்தியாவந்தடையும் வெங்காய சரக்குகள், பதிவுபெற்ற நிறுவனத்தின் மூலம் இறக்குமதியாளரால் இங்கேயே தூய்மைப் படுத்தப்படும்.
தொடர்புடைய அதிகாரிகளால் பின்னர் இவை பரிசோதனைசெய்யப்பட்டு, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை என்றால் மட்டுமே சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும்.
அவ்வாறு இல்லாதபட்சத்தில், சரக்குகள் நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படும். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்கள் நுகர்வுக்காக மட்டுமே பயன்படுத்த படும் என்ற உறுதிமொழியும் இறக்குமதியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |