ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைதுவங்கியதை நேரில் ஆய்வுசெய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‛இந்தியாவில் ஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை’ என தெரிவித்தார்.

இந்தியாவில் சோதனை செய்யபட்ட, ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நாடுமுழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகிறது. தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலம்முழுதும், 190 இடங்களில், இன்று (ஜன.,08) ஒத்திகை நடைபெறுகிறது. ஒத்திகையை, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நேரில் ஆய்வுசெய்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகையை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார். பின் பேசிய அவர், குறுகியகாலத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. போலியோவை விரட்டியதுபோல, கெரோனாவையும் நாட்டைவிட்டு விரட்டுவோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: கொரோனா தடுப்புபணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகள். கொரோனா பரவதுவங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்புபணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகளவில் இந்தியாவில்தான் இறப்புவிகிதம் மிகக்குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது.

குறுகியகாலத்தில், ஓராண்டில் தடுப்பூசிகளை உருவாக்கியது சாதனை. அடுத்த சிலநாட்களில், இந்த தடுப்பூசிகளை நம்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 2ம் தேதி, இந்தியாவில் கிட்டத்தட்ட 125 மாவட்டங்களில் ஒத்திகை செய்யப் பட்டது. தற்போது, நாடுமுழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சென்னை, மத்திய மருந்துகிடங்கு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த ஒத்திகையை ஹர்ஷ் வர்தன் ஆய்வுசெய்தார். பின், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது : சென்னையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகையை 3 இடங்களில் ஆய்வுசெய்தேன். கொரோனா தடுப்பூசிபணிகள் திருப்தியையும் அளிக்கிறது என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...