கோவிட் விழிப்புடன் இருக்க வேண்டும்

கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை மற்றும் சூழ்நிலை குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிட்-19 தொற்றுபரவலை எதிர்கொள்வதற்கான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசி முகாம்கள், கோவிட்-19 அவசரகால நடவடிக்கைகள் மற்றும் இன்ஃப்ளூயன்சாவை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கபட்டது. கடந்த 2 வாரங்களில் கோவிட்-19 தொற்றுபாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்துவரும் நிலையில், இந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை செயலாளர், சர்வதேச அளவிலான கோவிட்-19 சூழ்நிலை குறித்தும், இந்தியாவில் தொற்று அதிகரிப்பு குறித்தும் உரையாற்றினார். இந்தியாவில் கோவிட்-19 தொற்று சற்றுஅதிகரிப்பது குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதாவது, 2023, மார்ச் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக புதியதாக கோவிட்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 888- ஆக இருந்ததாகவும், வாரந்திர தொற்று பாதிப்பு 0.98 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஐஎன்எஸ்ஏசிஓஜி ஆய்வகங்களில் தொற்றுக்கான மரபியல்கூறுகளை கண்டறிதலின் அவசியம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்மூலம் உரிய நேரத்தில் புதியநோய் உருமாற்றங்களை கண்டறிய முடியும் என்றும், மருத்துவமனை வளாகங்களில் நோயாளிகள், சுகாதார நிபுணர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் முககவசங்களை அணிதல் உள்ளிட்ட கோவிட்வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். கூட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், “ஐஆர்ஐ/எஸ்ஏஆர்ஐ பாதிப்புகளை திறம்பட கண்காணித்தல், இன்ஃப்ளூயன்சா, சார்ஸ்-சிஓவி-2, அடினோ வைரஸ் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளை மாநிலங்களுடன் இணைந்து கண்காணிக்கவேண்டும். இன்ஃப்ளூயன்சா, கோவிட்19-க்கான போதிய மருந்துகள் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதன் அவசியம்குறித்தும் போதுமான மருத்துவ படுக்கைகள், சுகாதார மனிதவளங்கள் ஆகியவற்றை உறுதிசெய்தல் வேண்டும்.

கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே நாடுமுழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கோவிட்வழிகாட்டு நெறிமுறை, ஆய்வக கண்காணிப்பு மற்றும் அனைத்து கடுமையான சுவாசநோய் (எஸ்ஏஆர்ஐ) ஆகிய 5-மடங்கு திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும். நமது மருத்துவமனைகள் அனைத்து தேவைகளுக்கும் தயாராக இருப்பதை உறுதிசெய்ய, மாதிரி ஒத்திகைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...