கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனில் முக்கியபங்கு வகிக்கும் இந்தியா, உலகுக்கு கிடைத்த சிறந்தசொத்து என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்புமருந்து கண்டறியப்பட்டு, முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் கொரோனா தடுப்புமருந்துகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இதுவரை சுமார் 55 லட்சம் டோஸ் மருந்துகளை தனது அண்டை நாடுகளுக்கு இந்தியா இலவசமாக அளித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா தனது தடுப்பூசிகளை அதிகளவில் உற்பத்திசெய்து வருகின்றது.
உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி விநியோகிப்பதில் இந்தியா முக்கியபங்கு வகிக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித்திறன்தான் உலகுக்கு கிடைத்துள்ள மிக சிறந்தசொத்து. உலகம் அதை புரிந்துகொண்டு, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் உற்பத்திசெய்ய ஏதுவாக லைசென்ஸ் வழங்கப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |