சசிகலா தமிழகம் திரும்பியபிறகுதான், அவருடைய நிலைப்பாடு தெரியும்

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்வேட்பாளர் என அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சியின் முடிவை பாஜகவும் ஏற்கிறது என அக்கட்சி தலைவர் முருகன் தெரிவித்தார்.

சேலம்மாவட்டம் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் இளைஞர்அணி மாநாட்டு திடலை பார்வையிடும் நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் செவ்வாய்க் கிழமை (பிப். 2) சேலம்வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் முருகன் கூறியது:

“நாட்டின் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் மனதில்கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இதில் தேர்தல்நோக்கம் எதுவும் இல்லை.

முத்ரா திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்டம், பயிர்க்காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களால் தமிழகம் தான் அதிகளவில் பயனடைந்துள்ளது.

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கின்றனர். நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவித்துள்ளார். அதிமுகவுடன் இணைந்து, வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின்போது அமைக்கப்பட்ட இந்தக்கூட்டணி தொடர்கிறது. எங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடிக்கும்.

அதிமுக பெரியகட்சி. அக்கட்சித் தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. அந்தமுடிவை நாங்கள் ஏற்கிறோம்.

தமிழகத்தின் மீது அக்கறை இருப்பதால் தான் பிரதமர் மோடி, மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு அறிவித்து வருகிறார். ராகுல்காந்தி வருகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளராது. இங்கே 3வது அணி அமையவும் வாய்ப்புஇல்லை.

சசிகலா தமிழகம் திரும்பியபிறகுதான், அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும். அதன்பிறகு அரசியல் சூழ்நிலை குறித்து பார்க்கலாம். அதிமுக – அமமுக இணைப்பிற்கு பாஜக முயற்சிக்கவில்லை.” இவ்வாறு பாஜக தலைவர் முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...