ஆசாத், கட்சிக்காக மட்டும் அல்லாமல் நாட்டிற்காக கவலைப்பட்டவர்

காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், கட்சிக்காக மட்டும் அல்லாமல் நாட்டிற்காக கவலைப்பட்டவர் என அவரது பிரிவு உபசாரவிழாவில் ராஜ்யசபாவில் நடந்த உரையில் பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவிவகித்து வருகிறார். இவரது பதவிகாலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், சட்ட சபை தேர்தல் நடத்தப்பட வில்லை. எனவே குலாம் நபி சுாத் மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.

இந்நிலையில், ராஜ்யசபாவில் ஓய்வுபெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசாரவிழா நடந்தது.

அப்போது, அவர்களைபாராட்டி மோடி உருக்கமாக பேசியதாவது:
குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரதுகட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர். அவரது இடத்திற்கு வரும் புதியதலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது. இவர் அவையைவிட்டு போனாலும் அவரது அறிவுரகைள் , கருத்துக்கள் என்றும் தேவைப்படும். அவருக்கு நான் தலை வணங்குகிறேன், என கண் கலங்கியவாரே பேசினார். மேலும் ” ஆசாத் சல்யூட் ” என நெற்றியில் கை வைத்து அடித்து காட்டினார். இந்நேரத்தில் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...