'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான உப்பு சுவையற்றது. உடல் அழியாத வண்ணம் காக்கும் சக்தி உப்புக்கு உண்டு. உப்புச்சுவை அதிகமானால் உணர்ச்சிவசப்படுதல், அல்லது கை, கால், முகம் வீக்கம் உண்டாகும்.
தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். அல்லது இரத்த அழுத்தம் உண்டாகும். இரத்தத்தில் உள்ள உப்பைப் பிரிக்க சிறுநீரகங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உப்பு அளவுக்கு மீறினால் தப்பாக முடியும். நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது.
உப்பை தனியாகப் பயன்படுத்தக்கூடாது. சூடுபடுத்தும் உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதுதான் சிறந்தது. சூடுபடுத்தாமல் பயன்படுத்தும் உணவுப் பொருள்களுக்கு தனியாக சூடுபடுத்திய உப்பைப் பயன்படுத்த வேண்டும். அல்லது மிளகுத்தூள் கலந்து பயன்படுத்த வேண்டும்.
உப்பின் தாய் கடல். தந்தை சூரியன். சூரிய வெப்பம் இல்லாவிட்டால் உப்பு இல்லை. உப்பை மீண்டும் சூடுபடுத்தினால் அந்த உப்பில் உள்ள தீமைகள் விலகி உப்பு தூய்மையாகும்.
சான்றாக கடலில் இருக்கும் தண்ணீர் உப்பு நிறைந்தது. ஆனால் சூரிய ஒளியால் ஆவியாகி அதன் பின்னர் மேகமாகி, அந்த மேகம் சூரிய ஒளியால் தூய்மையாகிறது. பின்னர் மழையாகப் பொழிகிறது. அந்த மழைநீர் சுத்தமானதாகவும், உப்பு நீங்கியதாகவும் இருக்கிறது.
நம் முன்னோர் உப்பைச் சுத்தப்படுத்திய பிறகே பயன்படுத்தினர். மண்சட்டியில் கல் உப்பை வறுக்க வேண்டும். அப்போது முருங்கைக்கீரை கலந்து வருதால் உப்பில் உள்ள தீமை விலகும். தற்போது நவீன உப்பு வந்துவிட்டது.
நம் முன்னோர் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கை இலைச்சாறு முறையாகப் பயன்படுத்தச் செய்தனர். முருங்கைக் கீரையில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-டி, வைட்டமின்-சி, வைட்டமின்-இ, வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் என்று சத்துகள் உள்ளன. இரசாயன உரம் சிறிதும் இல்லாதது முருங்கைக்கீரை.
இயற்கையாக மாறும் உடற்சூட்டை மீண்டும் பெருவது, உடலுழைப்பு உடையவர்க்கு அவர்கள் உழைப்பினால் எளிதாகிறது. உடலுழைப்பு, மூச்சுப்பயிற்சி, உடலுக்கேற்ற உணவுண்பது, உடல் சூட்டை இயற்கையாக காக்கும் சிறந்த முறையாகும்.
அருநெல்லிக்காய், வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, இளநீர், தனியா, வெங்காயம், வெங்காயத்தாள், முள்ளங்கி, முள்ளங்கிக்கீரை, முளைக்கீரை, கீரைத்தண்டு, வெண்பூசணிக்காய் போன்றவற்றில் இயற்கையாக உப்புச் சுவை உள்ளது.
நன்றி : வேலூர் மா.குணசேகரன்
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.