”ஜார்க்கண்டில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்ததா?” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரசுக்கு கேள்வி எழுப்பினார்.
நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
தேர்தலில் தோற்றால், உடனே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை காங்., குற்றஞ்சாட்டுகிறது. தோல்வியை ஏற்காத அக்கட்சி நிர்வாகிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது பழிபோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் வெளியாகின. மஹாராஷ்டிராவில் தோல்வி அடைந்த காங்., மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குற்றஞ்சாட்டியது. அப்படியென்றால், ஜார்க்கண்டில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்ததா? அங்கு எந்த பிரச்னையும் அக்கட்சிக்கு இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு தான், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை காங்., குறை கூற போகிறது?
மத்தியில், 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., நாட்டு மக்களின் நலனுக்காக அல்லாமல், ஒரு குடும்பத்தின் நலனுக்காக, 77 முறை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது. அதே சமயம், 16 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பா.ஜ., 22 முறை மக்களின் நலனுக்காகவே அரசியலமைப்பில் திருத்தம் செய்தது.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத வரம்பை காங்கிரஸ் மீறியது. தாஜா அரசியல் செய்யும் காங்கிரஸ், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |