”திமுக., மீண்டும் ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது,” என, பிரதமர் மோடி, கோவை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து, கோவை, பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: தமிழக சட்ட சபை தேர்தல்வாயிலாக, புதிய அரசை தேர்ந்தெடுக்க வேண்டியபொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.மத்தியில் பா.ஜ., அரசும், தமிழகத்தில் அ.தி.மு.க., அரசும், கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்துக்கு, நல்ல உதாரணமாக செயல்பட்டுவருகின்றன.தமிழகமக்கள் பயன் பெறுவதற்காக, இணைந்து, பணியாற்றி வருகிறோம். இதில், தமிழகத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்திருக்கின்றன.
நம் நாடு, இருவிதமான துருவ அரசியலைப் பார்க்கிறது. ஒன்று, ஊழலும் ஆதிக்கமும் நிறைந்த ஆட்சி. மற்றொன்று, தேசியஜனநாயக கூட்டணியால் நிகழ்த்தப்படும் கருணை அரசு.சுயநலம் மட்டுமே அவர்களின் அடையாளம், இலக்கு. தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து நடத்தும்திட்டங்கள், ஊழலுக்கான திட்டங்களாகவே உருவாக்கப்படுகின்றன.
ஊழல் செய்வதை பற்றியே, அவர்கள் மூளையைகசக்கி, யோசித்துக் கொண்டிருக்கின்றனர். ஊழல் செய்வதற்கான சிறந்தவழிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு மட்டுமே, அவர்களுடைய கட்சிகளிலும், ஆட்சியிலும் முக்கியப் பதவிகளும், வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அப்போதெல்லாம் வன்முறைக்கு வழியை ஏற்படுத்தித் தருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், அப்பாவி மக்களை ஏமாற்றுவோரையும் கொடுமைப்படுத்து வோரையுமே கட்சியில் வைத்திருக்கின்றனர்.
தி.மு.க.,ஆட்சிக்குவந்தால் சட்டவிரோதிகள், தாங்களே ஆட்சிக்கு வந்ததாக நினைப்பர். அவர்கள் மீண்டும் தலைதுாக்குவர். இத்தகைய சூழ்நிலைகளால், தமிழகப் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இவர்கள் எப்படிநடத்தினர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை நான் நினைவுபடுத்த வேண்டியதில்லை. ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு, திமுக.,வும், காங்கிரசும் வெகுமதி அளித்துவந்தன.
தி.மு.க., தமிழர் நலனுக்கான கட்சி என்ற அந்தஸ்தையும், அடையாளத்தையும் எப்போதோ இழந்துவிட்டது. அந்தக் கட்சி முழுமையான பெரும்பான்மை பெற்று, கால் நுாற்றாண்டு காலமாகிவிட்டது. இப்போது தமிழகம் என்ற, ஒரு மாநிலத்துக்குள் இருக்கிற ஒருபிராந்தியக் கட்சியாகிவிட்டது. தி.மு.க.,வுக்குள்ளும், காங்கிரசுக்குள்ளும் ஏராளமான உள்முரண்பாடுகள் இருக்கின்றன. இரண்டு கட்சிகளும், குடும்ப அரசியலை வளர்க்கிறகட்சிகள். உள்விவகாரங்களில் சிக்கியுள்ள அந்தக் கட்சிகளால், ஒருநல்ல ஆட்சியை நிச்சயமாகத் தரமுடியாது. தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் இருந்த, கடுமையான மின்வெட்டை உங்களால் என்றைக்கும் மறக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |