இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம்

” இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், ” என பிரதமர் மோடி கூறினார்.

டில்லியில் சர்வதேச கூட்டுறவு மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதே கூட்டுறவு ஒத்துழைப்புக்கான மாநாடு இந்தியாவில் முதல்முறை துவங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், நமது கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம்.

இம்மாநாட்டின் மூலம் இந்தியாவின் எதிர்கால கூட்டுறவுப் பயணத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவோம் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனுபவம் மூலம், சர்வதேச கூட்டுறவு மாநாட்டிற்கு 21ம் நூற்றாண்டிற்கான கருவிகளையும், புதிய உணர்வையும் பெறும்.

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் விரிவடைந்து வருகிறது. உலகை பொறுத்த வரை கூட்டுறவு என்பது ஒரு மாதிரி. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அது கலாசாரத்தின் அடிப்படை. அது வாழ்க்கை முறையில் ஒரு அங்கம். இந்தியாவில் எட்டு லட்சம் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன.

அவற்றில் 98 சதவீதம் கிராமப்புற பகுதிகளில் உள்ளன. கூட்டுறவு அமைப்புகளுடன் 30 கோடி பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். கூட்டுறவு என்பது சர்வதேச ஒத்துழைப்பிற்கு முக்கியமாக உலகின் தெற்கு பகுதிக்கு புதிய ஆற்றலை கொடுக்கும் என இந்தியா நம்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.