முன்னாள் ராணுவ வீரர்களின்நலனில் அரசு உறுதியுடன் உள்ளது

முன்னாள் ராணுவ வீரர்களின்நலனில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

லடாக்குக்கு 3 நாள் பயணமாக, பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் சென்றுள்ளார். அவர் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ததில் முன்னாள் ராணுவத்தினரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். முன்னாள் ராணுவத்தினரின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரேபதவி, ஒரே ஊய்வூதியம் திட்டம் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி எடுத்தமுடிவு, நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்தது. முன்னாள் ராணுவத்தினரின் நலன் மற்றும் திருப்தியில், அரசின் அசைக்கமுடியாத உறுதிக்கு இது சாட்சியமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் எடுத்துக் கொண்ட கவனத்தைப் போல், உங்கள் நலனில் கவனம் செலுத்துவதுதான் எங்கள் நோக்கம்.

முன்னாள் ராணுவத்தினரின் மறுவாழ்வுக்கு வேலைவாய்ப்பு கண்காட்சிகள் உட்பட பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் மூலம் முன்னாள் ராணுவத்தினர் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல ஆன்லைன் சேவைகள் முன்னாள் ராணுவத்தினருக்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. கொவிட் தொற்றுநேரத்தில் தொலைதூர மருத்துவ சேவை வழங்குவதற்காக ‘இ-செஹாத்’ என்ற இணையதளம் தொடங்கப் பட்டது. முன்னாள் ராணுவத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஐவிஆர்எஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூர், ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதன்பின் லடாக், லே, கார்கில் பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.

லடாக் பயணத்தின் போது, எல்லைப்புற சாலைகள் அமைப்பு(பிஆர்ஓ) கட்டிய பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் ராஜ்நாத்சிங் தொடங்கி வைப்பார். அங்குள்ள வீரர்களை சந்தித்தும் அவர் கலந்துரையாடுகிறார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...