சர்வதேச போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டு மக்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார். சமூகஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின கீழ், இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற அரசு உறுதியுடன் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கொடுமையிலிருந்து நாட்டை விடுவித்து, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த உலகத்தை அளிப்பதற்கு நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
போதைப்பொருட்கள் தனிநபருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும், தேசத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாக உள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார். போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயல்படுவதாகவும் சமரசமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்
அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |