மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம்செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் . புதிதாக பதவி ஏற்றுக் கொண்டவர்களில் பலர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த சிலநாட்களாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப் பட்டது. 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதில், 36 பேர் புதுமுகங்கள். 7 பேர் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்கள். அவர்களுக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்று கொண்ட அமைச்சர்கள் விவரம்

01. நாராயண் ரானே

02. சர்பானந்தா சோனாவால்

03. விரேந்திர குமார்

04. ஜோதிராதித்யா சிந்தியா

05. ராமசந்திரா பிரசாத் சிங்

06. அஸ்வினி வைஸ்னவ்

07. பசுபதி குமார் பரஸ்

09. கிரண் ரிஜ்ஜூ

09. ராஜ்குமார் சிங்

10. ஹர்திப் சிங் புரி

11. மனுசுக் மாண்ட்வியா

12. பூபேந்தர் யாதவ்

13. பர்சோத்தம் ரூபாலா

14. கிஷன் ரெட்டி

15. அனுராக் சிங் தாகூர்

16. பங்கஜ் சவுத்ரி

17. அனுபிரியா சிங் படேல்

18. சத்யபால் சிங் பாகேல்

19. ராஜிவ் சந்திரசேகர்

20. சுஷ்ரி சோபா கரன்தல்ஜே

21. பானுபிரதாப் சிங் வர்மா

22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

23. மீனாட்சி லேகி

24. அன்புர்னா தேவி

25 நாராயஸ்வாமி

26. கவுசல் கிஷோர்

27. அஜய் பட்

28. பிஎல் வர்மா

29. அஜய் குமார்

30. சவுகான் தேவ் சிங்

31. பக்வந்த் குபா

32. கபில் மோரேஸ்வர் பாட்டீல்

33. சுஷ்ரி பிரதிமா பவுமிக்

34. சுபாஷ் சர்கார்

35. பக்வந்த் கிஷன்ராவ் காரத்

36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

37. பார்தி பிரவின் பவார்

38. பிஸ்வேஸ்வர் டுடு

39. சாந்தனு தாகூர்.

40. முஞ்சபரா மகேந்திரபாய்

41. ஜான் பர்லா

42. எல்.முருகன்

43. நிஷித் பிரமனிக் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

இதன் மூலம், மத்திய அமைச்சரவையின் பலம் 53 என்ற எண்ணிக்கையில் இருந்து 77 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர்மருத்துவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

One response to “மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...