2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுக்கான வருமானவரி ரூ.3.11 கோடியை செலுத்த நடிகர் சூர்யாவுக்கு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வருமானவரி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டது என்கிற அடிப்படையில் வரியின்மீதான வட்டியைக் கட்டுவதற்கு மட்டும் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சூர்யா.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது.வழக்கைவிசாரித்த நீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடிசெய்துள்ளது.வருமானவரி மதிப்பீடு செய்வதற்கு நடிகர் சூர்யாவின் தரப்பு ஒத்துழைக்காததால் தான் கணக்கிடுவதில் தாமதமானது என்று வருமானவரித் துறை தரப்பு நீதிமன்றத்தில் விளக்கியது.
இதன் அடிப்படையில் சூர்யாவுக்கு வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் உரிமையில்லை என்றும் வாதம்செய்தது. இதன் அடிப்படையில் நடிகர் சூர்யாவின் வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி சுப்ரமணியம்.
முன்னதாக இதேநீதிபதி சுப்ரமணியம் தலைமையிலான அமர்வுதான் நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் தொடர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மீதான நுழைவுவரி ரத்து வழக்கையும் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி நீதிபதி சுப்ரமணியம் அவர்களே..
குறிப்பு; வந்த வருமானத்தில் அரசுக்கு வரி செலுத்துவதிலேயே இவ்வளவு தில்லுமுல்லு என்றால்..?இந்த குடும்ப அகரம் பவுண்டேஷன் என்பது எல்லாம் வருமானத்திற்குதானோ..?உத்தமர்கள் போல்பேசுவது எல்லாம் வெளிவேஷம்தானோ..?அகரம் பவுண்டேஷனையும் வருமான வரிதுறை கவனத்தில் கொள்வது நல்லது.காரணம்..?ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல,இவர்களின் வேஷம் வெளிப்படுகின்றதே.
இந்த குடும்பமே மத்திய அரசின் எல்லா திட்டங்களையும்
எதிர்ப்பதும்,திமுகவுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்வதும் இதற்குதானோ..? இனம் இனத்தோடு சேரும் என்பதும்,உன் நண்பன் யார் என்று சொல்,நான் உன்னைப் பற்றி சொல்கின்றேன் என்ற பொன்மொழிகளும் எத்தனை உண்மை…?
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |