சட்டசபையில் குட்கா உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸ்

சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை தனி நீதிபதி ரத்து செய்தார். அந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 17 தி.மு.க.., எம்.எல்.ஏ.,க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

அதிமுக ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசை உயர்நீதிமன்றம் இரு முறை ரத்து செய்தது. இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூலை 29ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்றைய தினத்திற்கு( ஜூலை 31) தீர்ப்பு வழங்குவதாக கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

அதன்படி, நீதிபதிகள் இன்று, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், உரிமை மீறல் நோட்டீசுக்கு முதல்வர் உள்ளிட்ட 17 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...