நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது,” என, பிரதமர் நரேந்திரமோடி கூறினார். பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ராணுவமேம்பாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடந்த, ‘வெபினார்’ எனப்படும் இணைய வழிகருத்தரங்கில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:ராணுவத்துறையில் நாடு தன்னிறைவுபெற, அரசு அதிகம் கவனம் செலுத்திவருகிறது. பட்ஜெட்டை பார்த்தாலே, ராணுவம் தன்னிறைவு பெறுவதில், அரசு கொண்டுள்ள உறுதியை தெரிந்துகொள்ள முடியும்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போதும், சுதந்திரத்திற்குப் பிறகும், நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்புபலம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அதன்பின் தயாரிப்பு குறைந்து விட்டது. நம் உற்பத்தி திறனில் எந்த குறைபாடும் இல்லை. அதில் கவனம் செலுத்தாததுதான் காரணம். ஒரு நாட்டின் பாதுகாப்பு கொள்கையில், சொந்தமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் வைத்திருப்பதும், தனித்துவமான ராணுவமும் மிகவும் முக்கியமானது.
ஒரே மாதிரியான தளவாடங்களை, 10 நாடுகள் வைத்திருந்தால், எந்தநாட்டின் ராணுவமும் தனித்துவம் பெறாது. மத்தியில் நாங்கள் பொறுப்பேற்றபின், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்திவருகிறோம். ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் இறக்குமதி செய்யும்போது, அதற்கான நடைமுறை, சிக்கல்கள் நிறைந்ததாகஉள்ளது.
தளவாடங்கள் நம் ராணுவத்திடம் வந்தடையும்போது, அவை காலாவதியாகி விடுகின்றன. இதற்கு ஒரேதீர்வாக, ‘தன்னிறைவு இந்தியா, மேக்இன் இந்தியா’ திட்டங்கள் உள்ளன. கடந்த 2000 – 2014 வரை, ராணுவ தளவாடங்கள் தயாரிக்க, 200 இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டிருந்தது.மேக் இன் இந்தியா திட்டத்திற்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் காரணமாக, ராணுவதளவாடங்கள் தயாரிப்பில், கடந்த ஏழு ஆண்டுகளில், 350 புதிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த ஆறு ஆண்டுகளில், ராணுவதளவாட ஏற்றுமதி, பல மடங்கு அதிகரித்துள்ளது. நம் தளவாடங்கள், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. நாட்டின் ராணுவம் சார்ந்த உற்பத்திதுறையில், ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உகந்தசூழலை உருவாக்குவதற்கான திட்டம், பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப சக்தி தான், நம் மிகப்பெரிய பலம். இதை நாம் ராணுவத்தில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |