பொள்ளாச்சியில் பொங்கியவர்கள் இப்போது அடங்கி போவது ஏன்?

விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதே போல பல்லடம் அருகே 3வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுக பிரமுகரான கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்ப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண்ணை இரண்டு திமுக நிர்வாகிகள், நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அது வீடியோ படம் எடுத்து, பல மாதங்களாக அப்பெண்ணை மிரட்டி செய்த வன்கொடுமை நெஞ்சை பதற வைக்கிறது.

வடமாநிலங்களின், ஒரு சில படிப்பறிவில்லாத மக்கள் வாழும், கிராமப் பகுதியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், தற்போது தமிழ்நாட்டில் பரவலாக அடுத்தடுத்த நிகழ்ந்து கொண்டிருப்பது, அதிலும் ஆளும் திமுக கட்சிப் பிரமுகர்கள் சம்மந்தப்பட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடுமையை நினைவு படுத்தும் வகையில் அதே பாணியில் இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அப்போது பொங்கி எழுந்த சமூக சேவகர்களும், ஒரு தலைப்பட்சமான விமர்சனங்களும், இப்போது சத்தமில்லாது அடங்கிப் போவதன் மர்மம் என்ன?.

இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த வெட்கக்கேடான செயலில் முதலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு உள்ளூர் திமுக பிரமுகர்கள் இருவர் என்பதே.

தமிழகத்தில் கௌரவம் கருதி இது போன்ற குற்றச்செயல்கள் பொது வெளிக்கு வராமல் குடும்பத்தினரால் மறைக்கப்பட்டும் பெண்களுக்கு எதிரான அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.

இந்தக் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தருவது அவசியமே, ஆனால், அதற்கு இணையான அவசியமும் அவசரமுமான பணி, தற்போது திமுக ஆட்சியில், ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். குற்றவாளிகளுக்கு அச்சத்தைக் கொடுக்கும்.

மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள், காவல் துறைக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தை செலுத்தும், தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை விடுவிப்பாரா?, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?.

நன்றி அண்ணாமலை

பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...