கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்க சீதபேதி குணமாகும்.
அம்மை போட்டபின் முகத்தில் பள்ளம் பள்ளமாக வடு தோன்றும். இதைப் போக்க கறிவேப்பிலை 3௦ கிராம், கசகசா 15௦ கிராம், கஸ்தூரி மஞ்சள் 8 கிராம் இவைகளை மைபோல அரைத்து முகத்தில் கனமாகத் தடவி அரை மணிக்குப் பின் கழுவி விடவும். 7 நாட்கள் செய்தால் வடு மாறும்.
இதை மனத்துக்காக குழம்பு, சாம்பார், காய்கறிகளில் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். சுரம், பித்தம் தீரும். அருசியை மாற்றும். பசி உண்டாக்கும். தீனிப்பைக்கு வலிவு கொடுக்கும். இத்துடன் நெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.