சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்குவராது என்று இந்தியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் எச்சரித்திருக்கிறார்! அதாவது, உக்ரைன் விவகாரத்தில் எங்கள்பக்கம் நிற்காமல், ரஷ்யா பக்கம் நிற்கிறீர்கள், வியாபார ஒப்பந்தம் போடுகிறீர்கள், ஆயுதம் வாங்குகிறீர்கள், மலிவுவிலையில் எண்ணெய் வாங்குகிறீர்கள், ரூபாய்-ரூபிள் வர்த்தகம் செய்கிறீர்கள்! ஆனால், சீனாதாக்கும்போது ரஷ்யா உங்களுக்கு உதவாது, நாங்கள்தான் வரவேண்டும். அப்போது உங்களை வைத்துக் கொள்கிறோம் என்ற பொருள்பட கதறி இருக்கிறார்!.
அதற்கு, போங்கடா போக்கத்த பசங்களா, போய் உங்கவேலைய மட்டும் பாருங்கடா என்ற அர்த்தத்தில் பதில்கூறி இருக்கிறார் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர்! ரஷ்ய போருக்கு முன் வாங்கியதை விட அதிக எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது உங்கள் அணியில் உள்ள ஐரோப்பிய நாடுகள தான். ரஷ்யாவுடன் நீங்கள் செய்யும் வர்த்தகத்தில் ஏழில் ஒருபங்குதான் நாங்கள் செய்கிறோம். எங்கள் தேவையில் ஐந்து சதவிகிதம்தான் ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறோம் என்று பதிலளித்திருக்கிறார். அதாவது, எங்களை குறைகூறும் முன்பாக உங்கள் முதுகை பார்த்துக் கொள்ளுங்கள்! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்காத குறைதான்.
கடந்த 18 நாட்களில் 15 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்தியா வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் இந்தியாவை தங்கள் அணியில் இழுக்கவோ, சமாதானம் செய்யும்படி கேட்கவோ அல்லது பொருளாதார உதவிகேட்டோ வந்திருக்கிறார்கள்! உலகின் மிகவும் முக்கிய பொறுப்புமிக்க நிலைக்கு இந்தியா வந்திருக்கிறது! ஏறத்தாழ உலகின் நாட்டாமை!! இத்தனைக்கும் காரணம் கடந்த ஏழுஆண்டுகள் இங்கு நிலவும் அரசுதான்!.
நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் நிலை குலைந்துள்ள இந்த நேரத்தில், இந்தியா எடுக்கும் எந்த முடிவும், இந்தியாவோடு சேர்ந்து அந்நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்! அதை இந்தியா நன்கு உணர்ந்திருக்கிறது! அதனால் தான் இலங்கைக்கு உதவி இருக்கிறோம்.
சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்துநிற்கும் தருணம் ஒவ்வொரு பாரதியனுக்கும் வந்திருக்கிறது!!
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |