பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் நம் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. இதில் அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த விஷயத்தில், நம் தரப்புக்கு உலக அரங்கில் ஆதரவு திரட்டவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் செயல்கள் குறித்து ஆதாரத்துடன் விளக்கவும் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

தி.மு.க., – எம்.பி., கனிமொழி தலைமையிலான குழுவினர் நேற்று ரஷ்யா சென்றனர். இக்குழுவில் பா.ஜ., – எம்.பி., பிரிஜேஷ் சவுதா, சமாஜ்வாதி எம்.பி., ராஜீவ் ராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மாஸ்கோ சென்ற குழுவை ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ வரவேற்றார். அதன் பின் ரஷ்ய பார்லிமென்டின் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் உடனான கூட்டத்தில், கனிமொழி தலைமையிலான எம்.பி.,க் கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ரஷ்ய தரப்பு அதிகாரிகள் கண்டித்ததுடன், பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் முயற்சிக்கு துணை நிற்போம் என உறுதி அளித்தனர்.

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு கனிமொழி தலைமையிலான குழு இன்று ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா செல்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...