ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், முதல் முறையாக ரஷ்யா அதிபர் புடின், இந்தியா வரவிருக்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் பதிலடி தந்துகொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது.இந்த போரில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வெளிப்படையாக பல முறை கூறி விட்டார். இந்தியாவுடன் ரஷ்யாவும் நல்ல நட்புறவை பேணி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளின் தலைவர்களுடனும், இந்திய பிரதமர் மோடி நல்லுறவு வைத்திருக்கிறார்.இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இந்தியாவின் மத்தியஸ்தத்தை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
வரும் ஜனவரி மாதம் புடின், அவர் இந்தியா வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |