காங்கிரஸ் எம் பி சசி தரூர் பிரதமர் மோடிக்கு மீண்டும் பாராட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் மீண்டும் பாராட்டியிருப்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். இதனால் இவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பாளர்கள் அதிகம். முன்னாள் மத்திய அமைச்சரான இவர், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பை பாராட்டினார். இதற்கு காங்., கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசை பாராட்டிய சசிதரூர், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமையை மேலும் வெறுப்பேற்றினார்.

இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் மீண்டும் பாராட்டி உள்ளார்.

இது குறித்து சசி தரூர் கூறுகையில், ‘கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். அதனால், ஏற்பட்ட கரையை இன்னமும் நான் துடைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். உக்ரைன், ரஷ்யா அதிபர்களை கட்டித் தழுவிய பிரதமர் மோடி, சமாதானத்தை வலியுறுத்தினார்,’ என்றார்.

இதன்மூலம், ஒரே மாதத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் 2வது முறையாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து பா.ஜ., ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், ‘ சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் அந்தஸ்தை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டதை பார்க்கையில் திருப்தியளிக்கிறது. சசிதரூரின் கருத்தால் ராகுலின் முகம் சிவந்து போயிருக்கும். பிரதமரை பாராட்டிய சசிதரூர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காது என்று நம்புகிறேன்,’ எனக் கூறினார்.

சசி தரூர் இப்படி தொடர்ந்து பிரதமரை பாராட்டி வருவது, காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...