எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம்

ரெய்சினா பேச்சு வார்த்தை 2022 நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வ்ரூசுலா வான் டோர் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தனர். வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் ஆகியவற்றை குறித்த கருத் தரங்கு இந்த நிகழ்வில் நடைபெறும். இதில், 90க்கும் மேற்பட்ட நாடுகளின் 210 பிரதிநிதிகள் பேசவுள்ளனர்.

இந்தநிகழ்வில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், நாட்டில் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகுறித்து பேசினார். அவர் கூறியதாவது, “எலான் மஸ்க் இந்தியாவில் வந்து டெஸ்லா கார்களை தயாரித்து விற்பனை செய்ய நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அதற்கு எந்ததயக்கமும் தடையும் இல்லை. நம்மிடம் அதற்கான திறன் உள்ளன. தொழில்நுட்பவசதி உள்ளன. இதன் மூலம் காரின் விற்பனை விலையும் குறையும்.

இந்தியா மிகப்பெரிய சந்தையாகும். இங்கு ஏற்றுமதிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. எனவே, எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம். அதேவேளை, சீனாவில் கார்களை உற்பத்திசெய்து அவற்றை இந்தியாவில் வந்து விற்க நினைத்தால் அதை நாங்கள் ஏற்கமுடியாது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...