ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார்

நாட்டின் மலைவாழ் மக்கள் வகுப்பைசேர்ந்த ஒருவர் முதன் முதலாக மிக உயர்ந்து அந்தஸ்து கொண்ட ஜனாதிபதியாக திரவுபதி முர்மு (64) இன்று ( ஜூலை 25) பதவியேற்றார். பார்லி., மையமண்டபத்தில் நடக்கும்விழாவில் தலைமை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்வி., ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்ர். பதவியேற்புக்கு கிளம்பும் முன்னதாக டில்லி ராஜ்காட்காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பார்லி., வளாகத்திற்கு முப்படைதளபதிகள் மற்றும் வீரர்கள் புடைசூழ வரவேற்று அழைத்து செல்லப் பட்டார்.

 

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரவுபதிமுர்மு அமோக வெற்றிபெற்றார். ஒடிசாவில் உள்ள மலைகிராமத்தில் பிறந்த பழங்குடியின பிரிவைசேர்ந்தவர் மொத்தம் 6.76 லட்சம் ஓட்டுகளுடன், அதாவது 64 சதவீத ஓட்டுகள் பெற்று அவர் வென்றார். இதைத் தொடர்ந்து, நாட்டின் 15வது ஜனாதி பதியாக அவர் இன்று பதவியேற்றார்

பார்லிமென்ட் மையமண்டபத்தில் காலை 10:15 மணிக்கு நடக்கும் விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...