டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே அமோக வெற்றி பெற்றார். தேர்தலில் வென்று அதிபரான அவர், முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். 2 நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள அவரை, நேற்றிரவு மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
இந்நிலையில், இன்று (டிச.,16) டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே சந்தித்து பேச உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |