ஆம் ஆத்மீ குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி பதிலடி

நான் அதே தண்ணீரைத் தான் குடிக்கிறேன், ஹரியானா பா.ஜ., எனக்கு விஷம் கொடுக்குமா? என ஆம்ஆத்மி குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

டில்லியில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., அரசு ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கிறது. எனக்கு சொந்த வீடு இல்லை. ஆனால் ஒவ்வொரு ஏழைக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே எனது கனவு. கண்ணாடி அரண்மனை கட்டி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறிப்பவர்களால் ஏழைகளின் வீட்டைப் பற்றி சிந்திக்கவே முடியாது.

டில்லிக்கு வரும் தண்ணீரில் ஹரியானா மக்கள் விஷம் கலக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகிறார்கள். இது ஹரியானாவுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்குமான அவமானம். தண்ணீர் கொடுப்பதை புனிதமாக கருதும் நாடு இது. இந்த நாட்டு மக்கள் மீது இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இப்படி முட்டாள்தனமாக பேசுபவர்களுக்கு இந்த முறை டில்லி மக்கள் பாடம் கற்று கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

டில்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஹரியானா மக்கள் மீது கேவலமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

தோல்வி பயத்தில் ஆம்ஆத்மி உள்ளது. ஹரியானா மக்களின் குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் டில்லியில் வசிக்க வேண்டாமா? ஹரியானா மக்கள் தங்கள் சொந்த குழந்தைகளின் தண்ணீரில் விஷம் கலக்க முடியுமா? நான் அதே தண்ணீரை தான் குடிக்கிறேன். நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே தண்ணீரை தான் குடிக்கிறார்கள். ஹரியானா மக்கள் தண்ணீரில் விஷம் கலந்திருப்பதாக நினைப்பது தவறானது.

தவறுகளை மன்னிப்பது இந்திய குடிமக்களின் தாராள குணம்.இவர்கள் யமுனையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மூன்று தேர்தல்களில் ஓட்டு கேட்டனர். ஆனால் இதுவரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் திட்டங்களை நிறுத்துபவர்கள் அல்ல. திட்டங்களுக்கு உத்வேகம் கொடுப்பவர்கள்.இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் உள்ள ஏழை, எளியவர்களின் வீடுகளுக்குக் குடிநீர் சென்றடையும். டில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை பா.ஜ.,அரசால் வழங்க முடியும்.

11 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணிகளை முடித்து, வரும் 30 ஆண்டுகளுக்கான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதனால்தான் டில்லி மக்களிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன். டில்லிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நாடு முழுவதும் என்னால் நிறைய செய்ய முடிந்தது. ஆனால், டில்லியில் பணியாற்ற நீங்கள் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. நீங்கள் 25 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆட்சியை பார்த்திருக்கிறீர்கள்.

இப்போது பா. ஜ., வுக்கு ஓட்டளியுங்கள். சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். சிலர் 14 ஆண்டுகள், சிலர் 11 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இன்னும், அதே போக்குவரத்து நெரிசல், அதே அசுத்தம், அதே உடைந்த சாலைகள் காணப்படுகின்றன. மக்கள் குடிநீருக்காக ஏங்குகிறார்கள். டில்லியின் கோடிக்கணக்கான குடிமக்கள் ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் தங்கள் வலியை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவா� ...

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...