அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை:
இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள், ரொட்டி, ஜாம், ஜெல்லி வகைகள், உலந்த பழங்கள், கொட்டை வகைகள்; இறைச்சி மற்றும் முட்டை ஆகியவை.
புரோட்டீன் :
தினமும் 1.5 கிராம் முதல் 2 கிராம் வரை ஒரு கிலோ உடல் எடைக்குப் புரோட்டீன் உணவை இவர்கள் சாப்பிட வேண்டும்.
கொழுப்பு:
இவர்கள் அதிக அளவு கொழுப்பு மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். இவற்றைத் தனியாக அல்லாமல் உணவோடு சேர்த்துச் சாப்பிட வேண்டும். அதிகமாக இவற்றைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, வயிற்று வேதனை, மற்றும் ஏப்பம் ஆகியவை ஏற்படும்.
கார்-போ-ஹைட்ரேட் :
உணவில் இனிப்பான கிழங்கு வகைகள், பிஸ்கட், இனிப்பு வகைகள், வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கலோரி ;
தினமும் தேவைப்படுவதை விட அதிக அளவு கலோரி மிகுந்த உணவை இவர்கள் சாப்பிட வேண்டும். இதனால், உடலின் எடை அதிகரிக்கும்.
அதிக அளவு பச்சையான காய்கறிகள், மற்றும் கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இவற்றின் மூலமாக உடலுக்கு அதிகக் கலோரி சத்து கிடைப்பதில்லை. அதேவேளை இவை வயிற்றை நிரம்பி பிற கலோரி நிறைந்த உணவைச் சாப்பிட முடியாமல் செய்துவிடும்.
உணவின் போதும், அதன் பிறகும் அதிக அளவு நீரைப் பருகக் கூடாது. போதுமான அளவு வைட்டமின், தாது உப்புகள் ஆகியவை உணவில் இருக்கும்படி செய்து கொள்ள வேண்டும்.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.