மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ட்ரோன் தயாரிப்பு, பழுதுபார்த்தல், பராமரிப்பு பணிகளுக்கான 5 குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களை தொடங்கியுள்ளது. நாடுமுழுவதும் 19 மாநிலங்களில் 126 தொழில் பயிற்சி மையங்களில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
அதன்படி ட்ரோன் பழுதுபார்ப்பு தொழில்நுட்பம், ட்ரோன் தயாரிப்பு மற்றும் பாகங்கள் இணைப்பு தொழில்நுட்பம், ட்ரோன் இயக்குபவர், விவசாய பணிக்கான ட்ரோன், பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் உரம்தெளித்தல் ட்ரோன் ஆகியவற்றில் குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இத்தகவலை மக்களவையில், மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த போது தெரிவித்தார்
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |