இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை உடையது. இதன் வேரைக் கஷாயமாக உண்டால், வறட்சியை அகற்றும், உள்ளழலாற்றும், கோழையை அகற்றும் மலத்தை இளக்கும்; உடலுக்கு நன்மை பயக்கும்.
தேக அனல் தணிய, அதிமதுரம் 15 கிராம் எடுத்து வெந்நீரில் அரைத்துக் கலக்கி வடி கட்டிக் காலை, மாலை கொடுக்கவும்.
அதிமதுரம், சீரகம் வகைக்கு 10 கிராம் சேர்த்து, இடித்து 250 மில்லி, நீர்விட்டு 125 மி.லி. ஆகக் காய்ச்சி காலை, மாலை இரு வேளையும் 3 அல்லது 4 நாட்கள் கொடுக்க தீரும்.
அதிமதுரம் 100 கிராம் காய்ந்த திராட்சை, உப்பு, 200 கிராம் ஒன்றாகச் சேர்த்து ½ லிட்டர் தண்ணீரில் 125மி.லி. ஆகச் சுண்ட வைத்துக் கொடுக்க இரண்டு முறை பேதியாகும். நிறுத்த மோர் குடிக்கவும்.
இதன் இலையை அரைத்துப் பூசி வர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் துர்வாசனை, அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
வாயுபிடிப்பு, சுளுக்கு உண்டானால், சிற்றாமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) தடவி குன்றி இலையை அதன்மேல் ஒட்டவைக்க குணமாகும். அப்போது ஒருவித விறுவிறுப்பு உண்டாகி வலி குணமாகும்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.