காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: டிஜிபி., அறிவிப்பை வரவேற்கிறேன். சொல்வதோடு நிறுத்தாமல் குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பா.ஜ., தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என நம்புகிறோம்.
தமிழக போலீஸ் கைகள் கட்டப் பட்டுள்ளன. இதனால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனை பலமுறை கூறி வருகிறோம். அதுன் உச்சம்தான் தற்போது தொட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பா.ஜ., தொண்டர்களுக்கு உதவுவோம். தாக்குதல் நடத்துவதால், பாஜ.,வின் வளர்ச்சியை தடுக்கமுடியாது. இதே சூழ்நிலை தொடர்ந்தால், தொண்டர்களின் கோபத்திற்கு மாநில அரசு ஆளாகும் என எச்சரித்து கொள்கிறேன்.
மாநில அரசு இன்னும் ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை விரைவில் கைதுசெய்ய வேண்டும். பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து முன்கூட்டியே எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆரம்பத்தில் போலீசார் சுணக்கமாக செயல்பட்டாலும், தற்போது வரைவாக செயல்படுகின்றனர்.
பா.ஜ.வினரை உளவுத் துறையினர் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார் என கண்காணிப்பவர்கள், கலவரம் செய்பவர் களை கண்காணிப்பதில் என்ன பிரச்னை. பா.ஜ., தொண்டர்களை கைதுசெய்யும் அளவிற்கு என்ன கோபம். மாநில அரசிற்கு எச்சரிக்கும் விதமாக நாளை கோவையில் போராட்டம் நடக்க உள்ளது. புகார்மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |