தமிழக கவர்னர் ரவியை நேரில் சந்தித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஞானசேகரன் என்ற தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, சம்பவம் குறித்த எப்.ஐ.ஆர்., வெளியாகி, அதில் மாணவியின் பெயர் விவரங்களும் வெளியாகி பெரும் சர்ச்சை கிளம்பியது. அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடந்த சம்பவம், எப்.ஐ.ஆர்., வெளியானது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று 30ம் தேதி மாலை வலியுறுத்தினார்.
முன்னதாக, இன்று மதியம் த.வெ.க., தலைவர் நடிகர் விஜயும் கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |