குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன்  சிறிதளவு உப்புச் சேர்த்து மைபோல அரைத்து, 9 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண்ணின் சிறுநீரை விட்டு கலந்து உடல் முழுவதும் பூசிவிட வேண்டும். சுமார் அரைமணி நேரம் ஆன பின் தண்ணீரில் குளித்துவிட வேண்டும். இது போலத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் பூரான் விஷம் முறிந்து தடிப்புகள் மறையும்.

இந்தச் செடியின் இலையைச் சூரணம் செய்தோ அல்லது கஷாயமிட்டோ அல்லது இலையையைச் சாறு பிளிந்தோ உள்ளுக்குக் கொடுக்கலாம். அளவு சிறியவர்க்கு இலைச்சாறு (ரசம்)  கஷாயம், முதல் 4 தேக்கரண்டி வரை கொடுக்க ஆயாசமின்றிப் பேதியாகும். கபத்தையும், மலக்கிருமிகளையும் வெளிப்படுத்தும். இருமலைத் தணிக்கும். இதே அளவில் பெரியவர்களுக்குக் கொடுக்க கோழையை அகற்றும்.

 

பெரியவர்களுக்கு 5 மில்லி முதல் 10 மில்லி வரை கொடுக்க வாந்தியாகும். சிறியவர்களுக்குக் கொடுக்க 1 தேக்கரண்டி கொடுக்க வாந்தியாகும். இலை சூரணத்தை தக்க அளவாக குழந்தைகளுக்குக் கொடுக்க, மலப்புழுக்கள் வெளிப்படும் இலையையும், சிறிதளவு பூண்டையும் சேர்த்துக் கஷாயமிட்டுக் கொடுக்கலாம்.

 

இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து குளித்துவர குணமாகும். இன்னும் கிராமங்களில் இதைச் செய்கிறார்கள். இலைச்சாற்றை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி வாதவலிகளுக்கு தேய்க்க குணமாகும்.

 

இலையுடன் உப்பு சேர்த்து சாறு பிழிந்து தினந்தினம் இரு நாசிகளிலும் நசிய மிட்டு குளிர்ந்த நீரில் தலை மூழ்கிவர ஆரம்ப வைத்திய ரோகம் நீங்கும்.

 

சாறு பிழிந்து இத்துடன் சிறிது வேப்ப எண்ணெய் கலந்து இறகில் தோய்த்து, தொடையில் அல்லது உள்நாக்கில் தடவ, சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் தங்கியிருக்கும் கபக்கட்டு வாந்தியாக வெளிப்படும்.

 

வேரைக் கஷாயமிட்டு அல்லது வெந்நீர்விட்டு இடித்துச் சாறு பிழிந்து தக்க அளவில் கொடுக்க பழைய மலங்கள் கழியும் வேரை அரைத்துச் சுமார் ஒரு கொட்டைப் பாக்களவு நீரைக் கலந்து 3 நாள் கொடுத்து உப்பில்லா பத்தியம் வைக்க எலிவிடம் தீரும். ஆனால் வாந்தியும், பேதியும் ஆகும்.

 

குப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் துண்டையும், உப்பையும் சேர்த்து மைபோல அரைத்து, சிரங்கின் மேல் கனமாகப் பூசி வைத்திருந்து அரைமணி நேரம் கழித்து சிகைக்காயை கருகச் சுட்டு அத்துடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து, சிரங்கின் மேல் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்து விட்டு, தேங்காய் எண்ணையைத் தடவி வந்தால், மூன்றே நாட்களில் சிரங்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் நாக்குப் பூச்சிகள் வளர்ந்து வரும். குப்பைமேனிச் செடியின் வேரை மட்டும் சுத்தம் செய்து, இரண்டு, மூன்று செ.மீ. நீளத்துண்டுகளாக வெட்டி, வெய்யிலில் காய வைக்க வேண்டும். சுக்குபோலக் காய்ந்தபின் இதில் ஒரு கைப்பிடியளவு எடுத்து அம்மியில் வைத்து நைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி, ஆறிய பின் வேரைப் பிழிந்து எடுத்து விட்டு கஷாயத்தை வடிகட்டிக் காலை வேளையில், ஒரே வேளை மட்டும் குடித்து விட வேண்டும். இதைக் குடித்த மூன்று மணி நேரத்தில் வயிற்றைக் கலக்கி பேதி ஆகும்.. இரண்டு, மூன்று தடவை போகும் பயப்படத் தேவையில்லை. இந்த மலத்துடன் உயிரற்ற நாக்குப் பூச்சிகள் வெளியே வருவதைப் பாக்கலாம்.
எதிர்பார்த்த அளவு நாக்குப்பூச்சிகள் வெளியேறாவிட்டால் ஏழுநாட்கள் கழித்து மறுபடி இதே போலச் சாப்பிட்டால், வயிற்றிலுள்ள பூச்சிகள் எல்லாம் வெளியே வந்துவிடும்.

குப்பைமேனி இலையுடன் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கசக்கிச் சாறு எடுத்து தேள் உடலின் இடது பக்கம் கொட்டியிருந்தால்,வலது பக்கக் காது துவாரத்தில் இரண்டு துளியளவு சாற்றை விட வேண்டும். உடலின் வலது பக்கம் கொட்டியிருந்தால், இடது பக்கக் காது துவாரத்தில் இரண்டு துளி சாற்றை விட வேண்டும். காதில் சாற்றை விட்ட பின் மிகுதியிருக்கும் சாற்றைக் கொட்டு வாயில் விட்டு பத்து நிமிடம் வரை சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். இந்த விதமாகச் செய்தால் விஷம் உடனே இறங்கி விடும். கடுப்பும் நின்றுவிடும்.

சில சமயத்தில் எலி கடித்து விடுவது உண்டு. இந்த எலி விஷம் ஆரம்பத்தில் அவ்வளவாகாக் கெடுதலை உண்டு பண்ணுவதில்லை. ஆனால், வயதான காலத்தில் சுவாசகாசத்தை உண்டுபண்ணிவிடும். ஆகையால் ஆரம்பத்திலேயே விஷத்தை முறித்து விட்டால் வயதான காலத்தில் கஷ்ட்டப்பட வேண்டி இருக்காது.
குப்பைமேனி இலையை எடுத்துக் கொண்டு அதை அம்மியில் வைத்து நைத்து அடைபோலத் தட்டி எலி கடித்த இடத்தில் வைத்து, ஓர் இரும்புச் சட்டுவத்தை அடுப்பில் வைத்து, பழுக்காத அளவிற்குச் சூடேற்றி அதை இலை அடையில் சிறிது நேரம் வைத்தால் இலை அடையில் சூடேறி எலி கடித்த இடத்தில "சுரீர்" என்று தாக்கும். உடனே சட்டுவத்தையும் இலை அடையையும் எடுத்து விட வேண்டும். இந்த விதமாக ஒரு தடவை செய்தால் போதும். எலி விஷம் உடனே முறிந்து விடும்.

குப்பைமேனி இலையில் 12 எடுத்து வதக்கிச் சாறு பிழிந்து அந்தச் சாற்றை வலியுள்ள காதில் இரண்டு துளி வீதம் விட்டுப் பஞ்சடைத்து விட வேண்டும். காலை, மாலை பஞ்சு, அல்லது சுத்தமான வெள்ளைத் துணியில் தண்ணீரை நனைத்துக் காதினுள் செலுத்திக் காதை சுத்தம் செய்தபின் இலைச் சாற்றை விட வேண்டும். மூன்றே வேளையில் வலி நின்றுவிடும். அதன் பின் காதைச் சுத்தம் செய்து விட வேண்டும்.

சோகையைக் குணப்படுத்தும் தனிப்பட்ட சக்தி குப்பைமேனிக்கு உண்டு. குப்பைமேனி இலை, கரிசலாங்கண்ணி இலை, சிறு செருப்படை இலை இவைகளை ஒரே அளவாக எடுத்து வெய்யிலில் காயவைத்துச் சருகுபோல ஆனதும் உரலில் போட்டு இடித்து, சல்லடையில் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
தினசரி காலை, மாலை இந்தத் தூளில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, ஒரு வெற்றிலையின் மேல் வைத்துச் சிறிதளவு சர்க்கரையும் சேர்த்து நாவினால் நக்கிச் சுவைத்துச் சாப்பிட்டு விட வேண்டும். உடனே சிறிதளவு வெந்நீர் குடித்துவிட வேண்டும். இவ்வாறு நாற்பது நாட்கள் சாப்பிட்டால் சோகை பூரணமாகக் குணமாகி விடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...