பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா மரக்கன்று ஒன்றை நட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “தாயின் பெயரில் ஒரு மரம்” என்ற இயக்கம் நமது சுற்றுச்சூழலை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுக்கப்பட்ட அழைப்பாகும் என்றார். இந்த சிறிய செயல் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும், மாசுபாட்டைக்குறைக்கவும், நமது சுற்றுப்புறங்களை பசுமையாக்கவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தில் இணைந்து மரம் நடவேண்டும் என்றும், அவ்வாறு நடப்படும் மரக்கன்றுகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் இதை பரப்பி ஒரு பெரிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |