தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை நட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, செப்டம்பர் 2024 -க்குள் 80 கோடி மரங்களையும், மார்ச் 2025-க்குள் 140 கோடி மரங்களையும் நடவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் “ஒட்டுமொத்த அரசு” மற்றும் “ஒட்டுமொத்த சமூகம்” அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்தியாவின் பசுமைப் போர்வையை மீட்டெடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் மக்கள், சமூகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களை ஈடுபடுத்துகிறது. இந்த இயக்கத்திற்கு பெரும் வரவேற்று காணப்படுகிறது. பல மாநிலங்கள் தங்கள் மரம் நடும் இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே எட்டிவிட்டன.

அருணாச்சலப் பிரதேசம் (1.74 கோடி), அசாம் (3.17 கோடி), சத்தீஸ்கர் (2.04 கோடி), குஜராத் (15.5 கோடி), கோவா (5.4 லட்சம்), ஹரியானா (12.20 கோடி), ராஜஸ்தான் (5.5 கோடி), மத்தியப் பிரதேசம் (4.41 கோடி), பஞ்சாப் (94 லட்சம்), நாகாலாந்து (34.6 லட்சம்), ஒடிசா (4.3 கோடி), தெலுங்கானா (8.34 கோடி) மற்றும் உத்தரபிரதேசம் (26.5 கோடி) ஆகியவை வலுவான சமூக பங்களிப்புடன் செப்டம்பர் 2024 க்கான இலக்குகளை தாண்டியுள்ளன. மேலும், பீகார் (1.46 கோடி), கேரளா (11.8 லட்சம்), மகாராஷ்டிரா (1.78 கோடி), சிக்கிம் (12 லட்சம்) மற்றும் உத்தரகண்ட் (82 லட்சம்) மாநிலங்கள் பிரச்சாரத்தின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், ஜம்மு-காஷ்மீர், லடாக், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன.

சமூக ஈடுபாடு மற்றும் அரசாங்க ஒத்துழைப்புக்கு வலுவான முக்கியத்துவத்துடன், இந்த முயற்சி தாய்மார்களை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், வரும் தலைமுறைகளுக்கு பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...