விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததும், மின்கட்டணத்தை உயர்த்தும் -ப.ம.க. நிறுவனர் ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததும், மின்கட்டணத்தை உயர்த்த, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் என்பது பணம், பரிசுப்பொருட்கள் வழங்கும் மேளாக்களாக மாறி விட்டன. விக்கிரவாண்டி தொகுதியின் பல கிராமங்களில் தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று கொடுத்த பரிசுப்பொருட்களை, பொதுமக்களே கொண்டு வந்து, தி.மு.க., அலுவலகங்களில் வீசி விட்டு செல்வது, எந்த இடைத்தேர்தலிலும் நடக்காத அதிசயம்.

சட்டம் – ஒழுங்கு சீரழிவு, விலைவாசி உயர்வு, ரேஷனில் பருப்பு, பாமாயில் வழங்காதது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது, வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்காமல் ஏமாற்றுவது என, தி.மு.க., அரசின் வேதனை பட்டியல் நீள்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததும், மின் கட்டணத்தை 4.38 சதவீதம் உயர்த்த, தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளது. பண பலத்தையும், படை பலத்தையும் பயன்படுத்தி, லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியால், தி.மு.க., அதிகார திமிரின் உச்சத்தில் உள்ளது.

அதனால், மக்கள் விரோததிட்டங்களை திணிக்கத்துடித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தடுக்க, விக்கிரவாண்டியில் தி.மு.க.,வை வீழ்த்தி, அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...