கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவிலை கொள்ளையடிப்பதை தவிர, இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை. கள்ளச் சாராயத்தால் மரணங்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகரை, தி.மு.க., பெண் கவுன்சிலரின் கணவர் கொலை செய்துஉள்ளார். தமிழகம் முழுதும் கூலிப்படையினர் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.
திருமாவளவனுக்கு முதுகெலும்பு இருந்தால், முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன் வந்து போராட்டம் நடத்த வேண்டும். 60க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். அதற்காக ஏன் அவர் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை?
போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக், அ.தி.மு.க., பிரமுகரை கொலை செய்த தி.மு.க., கவுன்சிலரின் கணவர், விஷச் சாராய ஊறல் போட்டவர்களை பிடிக்க சென்றால், அங்கு ஸ்டாலின் போட்டோ ஒட்டியுள்ளது.
சட்ட விரோத தீய சக்திகளின் கூடாரமாக தி.மு.க., உள்ளது. அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டு, கட்சிக்காரர்களை காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு. கட்சியும், அரசும் முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. முதல்வர் துாங்கிக் கொண்டிருக்கிறார்.
எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,விற்கு மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவர். தி.மு.க., – அ.தி.மு.க.,விற்கு மாற்று கட்சி பா.ஜ., என, ஓட்டு சதவீதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து பா.ஜ., போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |