சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி ஓராண்டு நிறைவான நிலையில் தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்பட்டது

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேன்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் தினம் இன்று (ஆகஸ்ட் 23). இந்த நாள், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக இந்தியா விண்ணில் ஏவியது.இந்த விண்கலத்தில் இருந்து வந்த லேண்டர், ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் இரண்டும் நிலவை ஆய்வு செய்த அந்த நாள், இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.அதை கொண்டாடும் வகையில், ஆண்டு தோறும் ஆக.,23 தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இன்று முதலாம் தேசிய விண்வெளி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஓராண்டு நிறைவுயையொட்டி, நிலவு குறித்து சந்திரயான் 3 அனுப்பிய புதிய தகவல்களை இந்திய விண்வெளித் துறையின் ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்து வரும் சந்திரயான் 3, அங்கு ‘மாக்மா’ கடல் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. மாக்மா என்பது உருகும் பாறையின் பெரிய அடுக்குகள் ஆகும்.

*மாக்மா கடல் 4.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம். பொதுவாக கோள்கள் உருவாகும் போது இவை காணப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

* நிலவின் மேற்பகுதி கரடுமுரடான பாறைகளால் உருவாகி இருந்தாலும், சில இடங்களில் திரவம் போன்ற பொருள் மேற்பரப்பில் மிதந்து சென்றதற்கான வழித்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

* பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி 50 மீட்டர் வரை மென்மையான மேற்பரப்புகள் உள்ளன. அந்த பகுதிகளில் பள்ளங்கள், பாறைகள் என ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓராண்டுகள் நிறைவு பெறும் நாளான இன்று (ஆகஸ்ட் 23) பிரக்யான் ரோவர், லேண்டர் ஆய்வு செய்த தரவுகள் வெளியானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...