அருகம்புல்லின் மருத்துவக் குணம்

 காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது நம் முழு முதற் கடவுளாம் வேழமுகனுக்கு மிகவும் விருப்பமானதாகும்.

அருகம்புல்லை விடவும் அதன் வேருக்கு அதிக மருத்துவக் குணங்கள் உண்டு. எனவே அருகம்புல்லைக் கொண்டு வரும்போது அதன் வேருடன் கொண்டு வந்து முந்திய நாளே நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.

மறுநாள் காலையில் வேருடன் கூடிய அருகம்புல்லைக் கல்லுரலில் இட்டு நன்கு இடிக்க வேண்டும். இதனுடன் சின்ன வெங்காயமும் இட்டு நன்கு இடித்துப் பிழிந்து ஒரு எலுமிச்சம்பழத்தையும் பிழிந்து ஊற்றிக் காலை வேளையில் பருகி வந்தால் சர்வ ரோகங்களும் குணமாகும்.

அருகம்புல்லை வேருடன் பிடுங்கி வந்து தண்ணீரில் நன்கு அலசி இடித்துச் சாறு எடுத்து இதனுடன் மிளகுத்தூள் சேர்த்துப் பருகலாம். கோடைக் காலத்தில் இளநீருடன் இந்தச் சாற்றைக் கலந்து பருகலாம்.

இவ்விதம் காலை வேளையில் பருகிய பின்னர் குறைந்தது ஒரு மணி நேரம் சென்ற பின்னரே வேறு எதையும் உட்கொள்ள வேண்டும். அருகம்புல் சாறு பருகியவுடன் வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது.

இந்த முறையில் தொடர்ந்து ஒரு மண்டலம் பருகி வந்தால் உடலில் நச்சுத்தன்மை சேராது. இருந்தாலும் விலகிவிடும். உடலின் திசுக்களில் மட்டுமன்றி இரத்த நாளங்களிலுள்ள நஞ்சுகளையும் வெளியேற்றி விடும். இவ்விதம் நச்சுத்தன்மை வெளியேறவும் தேகம் நன்கு வலுவடையும்.

அருகம்புல்லை நன்கு வடிய அரைத்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கும் காயங்களுக்கு வைத்துக் கட்ட உடனடியாக இரத்தம் வருவது நிற்கும். இரணமும் விரைவில் ஆறிவிடும்.

அருகம் வேர்க்கட்டை, நன்னாரிவேர், ஆவாரம் வேர்ப்பட்டை, குமரிவேர் (சோற்றுக்கற்றாழை வேர்) இவைகளை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து ஒன்றிண்டாகச் சதைத்து ஒரு மன்பாண்டத்திலிட்டு மூன்று டம்ளராக வற்ற வைத்து இதைக் காலையிலும் மாலையிலும் குடித்து வர வேண்டும்.

இவ்விதம் தொடர்ந்து தயாரித்துக் குடித்து வந்தால் நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியைக் கண்டிப்பாகக் குணப்படுத்தலாம். ஒரு மண்டலம் வரை குடித்து வருவது நல்ல பயன் தருவதாகும்.

அருகம் வேரைக் கொண்டுவந்து நன்கு குறுகத் தறித்து ஒரு மன்பாண்டத்திலிட்டு ஏறக்குறைய நான்கு படி தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு படி நீராக வற்ற வைக்க வேண்டும்.

பின்னர் இந்தக் கஷாயத்தை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும். முன்சொன்ன மண்பாண்டத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் ஒரு படி நல்லெண்ணெய் விட்டுத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், கோரைக்கிழங்கும், பூமிச் சர்க்கரைக் கிழங்கு, அமுக்கிராக் கிழங்கு இவைகள் ஒவ்வொன்றையும் 25 கிராம் அளவு எடுத்துச் சதைத்து வைத்துக் கொண்டு ஒரு படி பசும் பாலையும் விட்டு அனைத்தையும் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். நன்றாக முறுகவிடாமல் வெற்றிலையைப் பிய்த்துப் போட்டுப் படபடவென்று சப்தம் வரும்போது எண்ணையை இறக்கிவிட வேண்டும்.

இதை ஒரு சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை இந்த எண்ணையைத் தேய்த்துக் குளித்தால், மூலச்சூடு, கபாலச்சூடு, வாதம், பித்தம், சூலைநோய், வயிற்று எரிவு, நீர்க் கடுப்பு, சொட்டு மூத்திரம் போன்ற சூடு சம்பந்தமான நோய்கள் குணமாகிக் கண்களுக்கும் நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலக அமைதிக்காக இணைந்து செயல்பட ...

உலக அமைதிக்காக இணைந்து செயல்பட உறுதி – மோடி மற்றும் ட்ரம்ப் உரையாடல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், பிரதமர் மோடி போனில் ...

இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கா ...

இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தி – பிரதமர் மோடி பெருமிதம் 'இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து ...

பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி சம ...

பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி சம்பவம் – அனைவருக்கும் எடுத்துக்காட்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது ராஜ பாதையில் ...

எனக்கு இந்திய டி.என்.ஏ – இந்தோன ...

எனக்கு இந்திய டி.என்.ஏ – இந்தோனேசியா அதிபர் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில், இந்தோனேசியா ...

''வேற்றுமையில் ஒற்றுமையே நம் பலம். நமக்குள் உள்ள வேற்றுமைகளை ...

ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொ ...

ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி – அமித்ஷா டில்லி மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...