பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும் – பிரதமர் மோடி பெருமிதம்

”நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும்,” என பிரதமர் மோடி பேசினார்.

‘மன் கி பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் நடந்து வருகிறது. இது தொடர்பாக எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. விண்வெளி துறையில் இந்தியா அற்புதங்களை செய்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரோ 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இது பாராட்டுக்குரியது.

400க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இது நாம் விண்வெளி துறையில் புதிய உயரங்களை அடைவதற்கான வலிமையை காட்டுகிறது. நமது விண்வெளி விஞ்ஞானிகள் குழுவில், பெண் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து துறையிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். விண்வெளித் துறையில் பணியில் இணைய நமது இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மார்ச் 8ம் தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்பட உள்ளது. இந்நாள் பெண் சக்தியை போற்றுவதற்கு சிறப்பான சந்தர்ப்பம் ஆகும். நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும். மகளிர் தினத்தன்று எனது சமூகவலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க போகிறேன். அன்றை தினம் பெண்கள் பதிவுகளை பகிரலாம்.

விண்வெளி மற்றும் அறிவியலைப் போலவே, இந்தியா ஏ.ஐ., தொழில்நுட்பத்திலும் ஒரு வலுவான அடையாளத்தை பெற உள்ளது.

இளைஞர்களிடையே கவலையை அதிகரிக்கும் விவகாரமாக உடல் பருமன் உள்ளது. தேசிய அறிவியல் தினத்தன்று இளைஞர்கள் அறிவியல் தொடர்பான மையங்களை பார்வையிட வேண்டும். ஒரு நாளாவது விஞ்ஞானியாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...