பார்க்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த புதிய ஸ்மார்ட் சென்சார் திட்டம்

பார்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த, குறைந்த செலவில், எளிதாக பயன்படுத்தத் தக்க, செல்பேசி அடிப்படையிலான புதிய ஸ்மார்ட் சென்சார் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சென்சார், உடலில் எல்-டோபாவின் அளவை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும். இதன் மூலம் இந்த நோயை தீவிரமாக கட்டப்படுத்துவதற்கு தேவையான மருந்தின் அளவை தீர்மானிக்க முடியும்.

நமது உடலில் உள்ள நியூரான் செல்கள் தொடர்ந்து குறைவதால், டோபமைன் அளவு கணிசமாக குறைகிறது. இதனால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. எல்-டோபா எனும் வேதிப்பொருள் நமது உடலில் டோபமைனாக மாற்றப்பட்டு பார்கின்சன் நோய்க்கு எதிரான மருந்தாக செயல்படுகிறது.

டோபமைன் குறைபாட்டை ஈடு செய்ய இது உதவுகிறது. எல்-டோபா சரியான அளவில் நிர்வகிக்கப்படும் வரை நோயும் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும், பார்கின்சன் நோயின் அளவையும் நோயாளியின் வயதையும் பொருத்து நியூரான்களின் இழப்பை ஈடு செய்ய அதிகப்படியான எல்-டோபா தேவைப்படுகிறது.

இருப்பினும், மிக அதிகப்படியான எல்-டோபாவை பயன்படுத்துவது, இரப்பை அழற்சி, மனநோய், சித்தப்பிரமை, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளுக்கு காரணமாகிறது. எல்-டோபா அளவு மிகவும் குறைவது, பார்கின்சன் நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

சிகிச்சையில் எல்-டோபா அளவின் முக்கியத்துவம் கருதி, எளிதாக, குறைந்த செலவில் அதனை கண்காணிக்கும் முறை கண்டறியப்படுவது அவசியமானது. இதையடுத்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நவீன அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் அண்மையில் ஸ்மார்ட் போன் அடிப்படையிலான சென்சார் முறை ஒன்றை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...