வளர்ந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட லடாக்கை உருவாக்குவதற்கான மோடியின் தொலைநோக்குப்பார்வையைத் தொடர்ந்து 5 புதிய மாவட்டங்கள் உருவாக்க முடிவு

வளர்ந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பற்றி ‘சமூக ஊடக எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்த முடிவின் மூலம், புதிய மாவட்டங்களான ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகியவை நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை தங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார். இந்த ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது லடாக்கில் லே மற்றும் கார்கில் உட்பட மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

லடாக் பரப்பளவின் அடிப்படையில் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும். தற்போது, லடாக்கில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இது இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மிகவும் கடினமானதாகவும், அணுக முடியாததாகவும் இருப்பதால், தற்போது மாவட்ட நிர்வாகம் அடிமட்ட அளவில் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறது.

இந்தப் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் அனைத்து பொது நலத் திட்டங்களும் மக்களை எளிதாக அடைய முடியும், மேலும் அதிகமான மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உள்துறை அமைச்சகத்தின் இந்த முக்கியமான முடிவு லடாக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு “கொள்கை அளவிலான ஒப்புதல்” வழங்குவதோடு,  புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான தலைமையகம், எல்லைகள், கட்டமைப்பு, பதவிகளை உருவாக்குதல், மாவட்ட உருவாக்கம் தொடர்பான வேறு எந்த அம்சத்தையும் மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு லடாக் நிர்வாகத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு, லடாக் யூனியன் பிரதேசம் இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான இறுதி முன்மொழிவை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும்.

லடாக் மக்களுக்கு மகத்தான வாய்ப்புகளை உருவாக்க மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...