கட்சி மூத்த நிர்வாகிகள் ஒய்வின்றி மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என பா.ஜ.,விற்கு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் உரையாற்றினார்.டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இதில்மத்திய அமைச்சர்கள் ஜே.பி., நட்டா, அமித்ஷா, கிரண் ரிஜிஜூ, நிர்மலா சீத்தாராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் புதுப்பித்தல், சான்று வழங்கிடல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் ஆகியவற்றை துவக்கி வைத்தார். பின்னர்மோடி பேசியது,கட்சியின் மூத்தஉறுப்பினர்கள், நிர்வாகிகள் மக்களுக்காக ஒய்வின்றி பணி செய்ய வேண்டும். ஜனநாயகத்தை பாதை பின்பற்றிமுதலில் நம் தேசம் என்பதை கொள்கையாக கொண்டு செயல்பட வேண்டும். வரும் தேர்தல்களில்அதிகபட்சமாக பெண்கள் வாக்களிக்க வைப்பதை ஊக்கவிக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்த்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |