டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். பிரதமர் மோடி உறுதி

‘டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, தாமரை மலரும்’ என்று நம்பிக்கை வையுங்கள் என டில்லியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில் 12 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று (ஜன.,05) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அவர், மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர், நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளேன். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கும், டில்லிக்கும் மிக முக்கியமானவை; இந்த ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற பங்களிப்பாளராக இருப்போம். டில்லி சட்டசபை தேர்தலில் தாமரை மலரும் என்று நம்பிக்கை வையுங்கள்.

டில்லியை வளர்ந்த இந்தியாவின், தலைநகராக நாம் உருவாக்க வேண்டும். இது எங்கள் கனவு. எனவே, டில்லியின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் டில்லி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பா.ஜ., கடுமையாக உழைத்தது.

உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும். டில்லிக்கு ரூ.75,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தின் மகத்தான வடிவத்தை வெளிப்படுத்தும் நகரமாக டில்லி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

உ.பி. சாஹிபாபாத் – டில்லி நியூ அசோக் நகர் இடையே ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் நமோ பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ரயிலில் பயணித்து, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...