மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு இன்று (அக்.,05) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.வாஷிமில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை தொடர்பான ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று(அக்.,05) மதியம் 1.30 மணியளவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ள திட்டங்கள் விபரம் பின்வருமாறு:
* 12,200 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட உள்ள தானே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மொத்த நீளம் 29 கிமீ ஆகும்.
* ரூ. 3,310 கோடி செலவில் சேதா நகர் முதல் ஆனந்த் நகர் வரையிலான கிழக்கு நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டுவார். ரூ.700 கோடி செலவில் கட்டப்படவுள்ள தானே மாநகராட்சியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
* பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை மோடி விடுவிக்கிறார். 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
* மகா சம்மான் நிதி யோஜனாவின் 5வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார். இதனால், பயனாளிகளுக்கு ரூ.2,000 கோடி வழங்கப்படும்.
* விவசாய உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சுமார் 1,920 கோடி ரூபாய் மதிப்பிலான 7,500 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
* 1,300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
* பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரியத்தின் அடையாளமான பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
* ரூ.2,550 கோடி செலவில் நவி மும்பை விமான நிலையத்தின் முதல் கட்ட திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதனால், சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |