“யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், அதை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுங்க,” என, மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
துாய்மை இந்தியா திட்டத்தையொட்டி மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நம் மக்கள் மிகவும் புத்திசாலிகள். வெளிநாடுகளில் இருக்கும்போது சாக்லேட் சாப்பிட்டால், அதன் கவரை பாக்கெட்டில் வைத்து, பிறகு குப்பைத் தொட்டியில் போடுவர். ஆனால், இங்கிருக்கும்போது சாலையிலேயே போடுகின்றனர்.
நானும் ஏற்கனவே அப்படித்தான், காரில் போகும்போது சாக்லேட் கவர்களை சாலைகளில் போட்டு வந்தேன். தற்போது, சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, வீட்டிற்குச் சென்று குப்பைத் தொட்டிகளில் போடுகிறேன்.
சாலைகள் உட்பட அனைத்து பகுதிகளையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், உடனே அதை படம் எடுத்து பத்திரிகைகளில் போடுங்கள். அதை மற்றவர்கள் பார்க்கும்போது அவமானமாக உணர்வதுடன், நாமும் இதுபோல் செய்யக்கூடாது என்பதை உணருவர். இவ்வாறு அவர் பேசினார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |